எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
றெக்க
றெக்க
இன்றைய சினிமா சூழலில் ஒரு படத்திற்கு புரமோஷன் மிகமிக அவசியம். ஆனால் ஒரு சில படங்கள் புரமோஷன்கள் தொடங்குவதற்கு முன்பாகவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கிவிடும் அப்படி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்சமயம், Commomman Present’s சார்பில் B.கணேஷ் அதிகப் பொருட்செலவில் பிரமாண்டமாய் தயாரிக்கும் பக்கா கமர்ஷியல் படமான ‘றெக்க’ படத்தின் மீது விழுந்துள்ளது.
ஹீரோ சின்ன வயதில் தெரியாத்தனமாக ஒரு தவறு செய்துவிடுகிறான். அந்த தவறு, மிகப்பெரிய பாதிப்பை கொடுக்கிறது. ஹீரோ பெரியவனான பின், அந்த தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை ஹீரோ பயன்படுத்திக் கொண்டானா? இல்லையா? என்பதை கமர்ஷியல் படங்களுக்கான எல்லா அம்சங்களையும் வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ரத்தின சிவா.
விஜய்சேதுபதியை, நமக்கு பெர்ஃபார்மராக தான் தெரியும். ஆனால் பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் ஹீரோவாக காட்டப்போகிறது ‘றெக்க’ படம். கும்பகோணத்து இளைஞனாக விஜள்சேதுபதியும், அவரின் காதலியாக மதுரை பொண்ணாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சிஜா ரோஸ், ஹரீஷ் உத்தமன், கபீர் சிங், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் என ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்திருக்கிறது.
‘றெக்க’ என்ற டைட்டிலுக்கு ஏற்ப சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, கும்பகோணம் மற்றும் பாங்காக் போன்ற வெவ்வேறு இடங்களில்
றெக்கை கட்டி பறந்ததுப் போன்ற வேகத்தில் படப்பிடிப்பு முடித்துள்ளார் இயக்குநர் ரத்தின சிவா.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரத்தின சிவா,
ஒளிப்பதிவு - தினேஷ்
கிருஷ்ணன், இசை - டி.இமான்,
பாடல்கள் - யுகபாரதி,
எடிட்டிங் - கே.எல்.ப்ரவீன்,
கலை - மோகன மகேந்திரன்,
ஆக்ஷன் - ராஜசேகர்,
நடனம் - ராஜீ சுந்தரம், காயத்ரி ரகுராம்.
இணைத் தயாரிப்பு - சுபா கணேஷ்
தயாரிப்பு - B.கணேஷ்
விரைவில் இசை வெளியீட திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் இப்படத்தை வரும் அக்டோபர் மாதம் ஆயுதபூஜை தினத்தன்று மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


