முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்சாவின் கதிதான் ராசாவிற்கும்.... சுப்பிரமணியசாமி

செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச் 22 - ராசா சிறையில் இல்லாமல் வெளியில் இருந்திருந்தால் சாதிக்பாட்சாவின் கதிதான் ராசாவிற்கும் ஏற்பட்டிருக்கும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி கூறியதாவது:- ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சோனியாவின் மருமகனுக்கும் தொடர்பு உள்ளது. ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்கு மேல் சோனியாவின் பெயரையும் வழக்கில் சேர்க்க மனு செய்வேன். கருணாநிதி பற்றி கவர்னரிடம் புகார் அளித்து ஒரு மாதம் ஆகிறது. இன்னும் அவகாசம் உள்ளது. அடுத்த தேர்தலில் கருணாநிதி முதலமைச்சராக இருக்க மாட்டார். அதனால் கவர்னரின் அனுமதி ஒரு பொருட்டல்ல. அடுத்த சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் ஜனதா கட்சி போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க.வை ஆதரிக்கும். நவம்பர்  மாதம் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்தில் மே 13-க்கு பிறகு புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும். 

சாதிக்பாட்சாவின் தற்கொலையில் மர்மம் உள்ளது. சி.பி.ஐ. விசாரித்தால் உண்மைகள் வெளி வரும். வரும் 31-ந் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில் கனிமொழி, கனிமொழியின் தாயார் பெயர் சேர்க்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படலாம். ராசா சிறையில் இருந்ததால் தப்பித்தார், இல்லாவிட்டால் சாதிக்பாட்சாவின் கதிதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு சுப்பிரமணியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony