எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.23 - மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்களும் 38 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் அடைவார்கள். விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் இது கொஞ்சம் நிவாரணம் அளிக்கும்.
மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது 6 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இதனால் மத்திய அரசுக்கு வருடத்திற்கு கூடுதலாக ரூ 5 ஆயிரத்து 715.90 கோடி செலவாகும். கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதியில் இருந்து கொடுக்கப்படுவதால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசக்கு ரூ.6 ஆயிரத்து 668.52 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. தற்போது அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 45 சதவீதம் வரை கொடுக்கப்படுகிறது. 6 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால் இனி அடிப்படை சம்பளத்தில் 51 சதவீத அகவிலைப்படி கிடைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


