முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மந்திரி எ.வ.வேலுவின் சொத்து 780 மடங்கு அதிகரிப்பு

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

திருவண்ணாமலை,மார்ச்.24 - திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. அமைச்சர் எ.வ. வேலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு அதிகரித்துள்ளது. இவரது தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 8 கோடியாம். ஆனால் கடந்த 2006-ம் ஆண்டில் இவர் தேர்தலில் போட்டியிட்டபோது இவரது சொத்து மதிப்பு வெறும் ரூ. ஒரு லட்சம்தான். தேர்தல் கமிஷனில் அப்படித்தான் இவர் கணக்கு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இப்போது இவருக்கு கிட்டத்தட்ட ரூ.8 கோடி சொத்து இருப்பதாக தனது வேட்புமனு பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார். 

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார். இவர் கடந்த 20-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை அவர் தாக்கல் செய்துள்ளார். இதன்படி ரூ.7 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் 43 லட்சத்து 98 ஆயிரத்து 423 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் இருப்பதாக இவர் கணக்கு காட்டியுள்ளார். அந்த கணக்கில் சிலவற்றை இங்கு காணலாம். கடந்த 2009-2010-ல் தனக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 974 என்றும் 2005-2006-ம் ஆண்டில் தனது மனைவி ஜீவாவுக்கு ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 970 வருமானம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னிடம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மனைவிடம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரமும் கையிருப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை கனரா வங்கி கிளையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 900-ம் திருவண்ணாமலை இந்தியன் வங்கி கிளையில் ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 523-ம் தன் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனைவி பெயரில் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். தன்னிடம் தங்கம்,வெள்ளி நகைகள் எதுவும் இல்லை என்றும் தன் மனைவி ஜீவாவிடம் ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 60 பவுன் பழைய தங்க நகைகள் உள்ளதாக எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் தென்மாத்தூர், கீழநாச்சிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 172 மதிப்புள்ள 57 ஏக்கர்,84 சென்ட் விவசாய நிலம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.ஒரு கோடியே 75 லட்சத்து 75 ஆயிரத்து 500 ஆகும். தன் மனைவி பெயரில் கீழநாச்சிப்பட்டி கிராமத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் 14 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதன் இப்போதைய சந்தை மதிப்பு 5 லட்ச ரூபாயாகும். திருவண்ணாமலை பெரிய தெருவில் 1999-ம் ஆண்டு தனது பெயரில்  23 லட்சத்து 53 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 600 சதுர அடி கட்டிடம் விலைக்கு வாங்கப்பட்டது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.ஒரு கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 500 என்று குறிப்பிட்டுள்ளார். தானும் தனது மனைவியும் விவசாயிகள் என்றும் தான் தாக்கல் செய்த சொத்துப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தனக்கு 7 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் 43 லட்சத்து 98 ஆயிரத்து 423 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் இருப்பதாக வேலு குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த முறை இவர் தேர்தலில் போட்டியிட்டபோது இவருக்கு இருந்த சொத்து மதிப்பு மொத்தமே ரூ. ஒரு லட்சம்தான். அதை அவரே தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். அதாவது தன் பெயரில் ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும் ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் நகை இருப்பதாகவும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 1.10 ஏக்கர் நிலம் மீஞ்சூர் கிராமத்தில் இருப்பதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம் இவர் அன்று குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு ரூ.ஒரு லட்சம்தான். ஆனால் இன்று அவருக்கு இருக்கும் சொத்து கிட்டத்தட்ட 8 கோடி. 780 மடங்கு இவரது சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். கடந்த முறை மனுத்தாக்கல் செய்தபோது தன் மனைவி பெயரில் எதுவுமே இல்லை என்று குறிப்பிட்டு இருந்த இவர், இந்த முறை மனுத்தாக்கல் செய்தபோது 2005-2006-ம் ஆண்டில் தனது மனைவிக்கு ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 970 வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதிலும் முரண்பாடு காணப்படுகிறது. எது எப்படியோ கடந்த 5 ஆண்டுகளில் இவரது சொத்தின் மதிப்பு இமயத்தின் உச்சிக்கே சென்றிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாம். இது எப்படி என்பதை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். 

தமழக உணவுத்துறை அமைச்சர”க இருந்து வரும் எ.வ.வேலு கடந்த 2006ல் தண்ட”ரம்பட்டு தெ”குதியில் பே”ட்டியிட்ட”ர் என்பது  குறிப்பிடத்தக்கது. இதேபே”ல் மற்றெ”ரு அமைச்சர”ன அன்பரசனின் செ”த்துக்களும் கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளத”க தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony