எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.26 - தேர்தல் அதிகாரிகளின் சோதனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சோதனை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பியோபெர்னான்டோ சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் எனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ 4 லட்சத்தை கொண்டு வந்த போது அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். காரணத்தை கூறியும் அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். எனவே எனது பணத்தை திருப்பி தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை சிரத்தையுடன் செயல்படுத்துவது தேர்தல் அதிகாரிகளின் கடமை. எனினும் அத்தகைய நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. தேர்தல் ஆணையம் சோதனை தொடர்பான விவரங்களை மக்களுக்கு தெரிந்த மொழியில் விளம்பரப்படுத்த வேண்டும். அதில் சோதனை செய்யப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுமேயானால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன விவரங்களுடன் யாரை அணுக வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரியப்படுத்திட வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் பணம் வருமான வரித்துறையினரின் வசம் இருப்பதால் அவர் அந்த துறையை அணுக வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


