எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.22 - மேதின விழா பொதுக்கூட்டங்களை தமிழகம் முழுவதும், புதுச்சேரியிலும் விரிவாக நடத்தும்படி அ.தி.மு.க.வினர் மற்றும் துணையமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. தலைமையகம் கட்டளையிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு இணங்க, கழகத்தின் சார்பில் மே தினத்தைக் கொண்டாடும் வகையில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் 1.5.2012 செவ்வாய்க் கிழமை அன்று மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்களும், நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள மே தின விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், நிர்வாகிகளுடனும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


