முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.25 - இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வில் அகால மரணமடைந்த முன்னாள் ராணுவ வீரருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா  அவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், பழைய ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மு.தனராஜ் என்பவர், 22.5.12 அன்று தனது மாட்டுத் தொழுவத்தில் பால் கறக்கச் சென்றபோது, மாட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயருற்றேன்.
இவ்விபத்தில் அகால மரணமடைந்த மு.தனராஜ் மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் மரணமடைந்த மு.தனராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!