Idhayam Matrimony

சிறந்த கட்டமைப்பை உருவாக்குங்கள் பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு பிரதமர் அழைப்பு

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 31- சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்  தொழில் திறமையை அபிவிருத்தி  செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு  பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். எஸ்.பி. ஜி.  எனப்படும் சிறப்பு அதிரடிப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் துவக்கி வைத்து பேசினார்.  அப்போது அவர் பேசுகையில், சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்  தொழில் திறமையை அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு ஏஜன்சிகளை கேட்டுக்கொண்டார்.

தீவிரவாதிகளால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது  உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு கவலை அளிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது என்றும் அதில் இந்தியாவும் ஒன்று என்றும் அவர் கூறினார்.

தீவிரவாத அச்சுறுத்தல்களில் இந்தியா விதிவிலக்கல்ல. கடந்த 30 ஆண்டு காலமாகவே இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டு  வருகிறது என்றும் அவர்  கூறினார்.

இப்போதுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு எல்லை எதுவும் இல்லை. இது பூகோள வரைமுறைகளை தாண்டி செல்கிறது. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

பொது அறிவு, திறமை, ஆதாரம்  ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதில் இப்போதுள்ள புதிய தலைமுறை  தீவிரவாதிகள்  மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். எனவே நாம்தான் உஷாராக  இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago