Idhayam Matrimony

நித்தியானந்தா ஆசிரமத்தில் போதை பொருள் சிக்கியதா?

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பெங்களூர், ஜூன். 15 - கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில், சோதனை நடத்திய போலீஸார், அங்கு பெருமளவில் மது பாட்டில்கள், கஞ்சா, ஆணுறைகள் சிதறிக் கிடந்ததைப் பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை கடந்த 2 நாட்களாக போலீஸார் சோதனையிட்டனர். அங்கிருந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் அனைவரும் யூனிபார்ம் உடையை தூக்கிப் போட்டு விட்டு போய் விட்டனர். சில வெளிநாட்டுக்காரர்கள் மட்டும் உள்ளேயே உட்கார்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆசிரமத்தில் அமைந்துள்ள ஒரு அறையைக் கூட விடாமல் ஒவ்வொரு அறையாக போலீசார் திறந்து சோதனையிட்டனர். 

இந்த நிலையில் ஆசிரமத்திற்குள்ளிருந்து சிலர் ஆசிரமத்திற்கு வெளியே பல பொருட்களை வீசியுள்ளனர். அவை கஞ்சாப் பொட்டலம், ஆணுறைகள், மது பாட்டில்கள், பல சிடிக்கள், பீடி, சிகரெட் என்று தெரிய வந்துள்ளது. இவற்றை யார் வீசியது என்பது தெரியவில்லை. இவற்றை ஆசிரமத்திற்குள் யார் பயன்படுத்தினார்கள் என்பதும் தெரியவில்லை. வீசப்பட்டுள்ள சி.டி.க்களில் ஆபாசப் படங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அந்த சி.டி.க்களை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago