முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியுடன் ரஜினி சந்திப்பு

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.17 - கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியை ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக  நிருபர்களிடம் தெரிவித்தாவது:- தி.மு.க தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை 10.30 மணியளவில் சென்றார். கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சுமார் அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த ரஜினியை நிருபர்கள் பேட்டி கண்டனர். 

அப்போது அவர் கூறியதாவது:-

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு கருணாநிதியை சந்திக்கவில்லை அவருடைய 89-வது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு  என்னுடைய வாழத்துக்களை நேரில் தெரிவித்தேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். 

தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!