முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூபதியுடன் விளையாடத் தயார் லியாண்டர் பயஸ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஜுன் - 19 - ஒலிம்பிக் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் மகேஸ் பூபதியுடன் விளையாட தான் தயாராக இருப்பதாக லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார். உலக டென்னிஸில் பலம் வாய்ந்த இரட்டையர்களாக வலம்வந்த லியாண்டர் பயசும், மகேஸ் பூபதியும் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது பிரிந்தாலும் 2011 இல் மீண்டும் இணைந்தனர். ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே இருவருக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சார்பாக பயஸ் - பூபதி அடங்கிய அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் தேர்வு செய்தது. ஆனால் மகேஸ்பூபதி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ரோகன் போபண்ணாவுடன் சேர்ந்து விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இது தொடர்பாக லியாண்டர் பயஸ் கூறியதாவது, தேர்வுக் குழுவினர் கூறும் வீரருடன் சேர்ந்து விளையாட நான் எப்போதுமே தயார் என்றுதான் கூறிவருகிறேன். அந்த கருத்தில் தற்போதும் எந்த மாற்றமும் இல்லை என்றார். ஒலிம்பிக்கில் யாருடன் இணைந்து விளையாட விரும்புகிறீர்கள் என்று ஒலிம்பிக் சங்கம் என்னிடம் கேட்டபோது, உடற் தகுதி அடிப்படையில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக கூறினேன். அது எல்லோருக்கும் தெரிந்தது தான் என்று அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago