முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் இறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டான்ட்ஸ்க், ஜூன். 29 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் உக்ரைனில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் ஸ்பெயின் அணி போர்ச்சுகலை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியின் ஆட்ட முடிவில் இரு அணிகளாலும் கோல் போட முடி யவில்லை. எனவே கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதிலும் எந்தஅணியாலும் கோல் போட முடியவில்லை. 

இதனால் ஆட்டத்தை தீர்மானிக்க பெ னால்டி ஷூட் அளிக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் 4 - 2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து கடந்த 3 வார கால மாக நடத்தி வருகின்றன. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் களத்தில் குதித்த ன. இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

யூரோ கோப்பையான இதில் பங்கேற் று வரும் நட்சத்திர வீரர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

யூரோ கோப்பை போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் உக்ரைனில் உள்ள டான்ட்ஸ்க் நகரில் நேற்று நடந்தது. இதில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. 

முன்னதாக அளிக்கப்பட்ட 90 நிமிட நேரத்தில் எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை. இதனால் கூடுத லாக 30 நிமிடம் வழங்கப்பட்டது. 

இதிலும் பந்துகள் மாறி மாறி இருபுற மும் பறந்தனவே தவிர ஒரு அணியா லும் கோல் போட முடியவில்லை. எனவே ஆட்டத்தை தீர்மானிக்க பெ னால்டி ஷூ ட் கடைபிடிக்கப்பட்டது. 

இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி 4 கோல் போட்டது. போர்ச்சுகல் அணி 2 கோல் மட்டுமே போட்டது. இதனால் ஸ்பெயின் அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஸ்பெயின் அணிக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த அணி வீரர் ஷபி அலோன்சா அடித்த பந்தை போர்ச்சுக ல் கோல் கீப்பர் பேட்ரிக்கோ தடுத் தார். 

இதே போல போர்ச்சுகல் வீரர் ஜாவோ மான்டிலோ அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் சேசிலால் தடு த்தார். முதல் வாய்ப்பில் இரு அணிகளும் கோல் போட முடியவில்லை. 

2-வது வாய்ப்பில் ஸ்பெயின் அணியி ல் இனஸ்டாவும், போர்ச்சுகல் அணியில் பெபேயும் கோல் அடித்ததால் 1- 1 என்ற கணக்கில் சமனிலை ஏற்பட்டது. 

3-வது வாய்ப்பில் ஜெரால்டு பிகேயும், (ஸ்பெயின்), நானியும் (போர்ச்சுகல்), கோல் அடித்ததால் 2- 2 என்ற சமநி ைல ஏற்பட்டது. 

அடுத்த வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் செ ர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். ஆனால் அந்த வாய்ப்பை போர்ச்சுகல் வீரர் புரூனோ அல்வாஸ் தவற விட்டார். அவர் அடித்த பந்து கோல் போ ஸ்டில் பட்டு வெளியேறியது. 

இதனால் ஸ்பெயின் அணி 3- 2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

5-வது வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் பே ப்ரிகஸ் கோல் அடித்ததன் மூலம் ஸ்பெயின் 4 -2 என்ற கோல் கணக்கில் வெ ற்றி பெற்றது. 

ஸ்பெயின் அணி தொடர்ந்து 3-வது முறையாக மிகப் பெரிய போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று உள்ளது. உலக மற்றம் ஐரோப்பிய சாம்பிய னான ஸ்பெயின் அணி இறுதிப் போட்டியில் இத்தாலி அல்லது ஜெர்மனியை சந்திக்கிறது.இந்த ஆட்டம் வருகிற 1-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்