முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.2 - தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவை நேரில் சந்தித்த அமைப்பின் தலைவர்கள் இதை தெரிவித்தனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் பிற்பகல் (1.4.2011 ​ வெள்ளிக் கிழமை), இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ.என்.டி.ஜே.) தேசிய தலைவர்  எஸ்.எம். பாக்கர், பொதுச் செயலாளர்  ஏ. முஹம்மது சித்திக், பொருளாளர் ஏ. அபுபக்கர், துணைப் பொதுச் செயலாளர்  எஸ்.எம். சையது இக்பால் ஆகியோர் நேரில் சந்தித்து, தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதாக  அறிவித்துள்ளதற்கும், முந்தைய தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையின் குளறுபடிகளை நீக்குவதாக அறிவித்துள்ளதற்கும், திருமண பதிவு சட்டத்தை கட்டாயமாக அமுல்படுத்துவோம் என்று அறிவித்துள்ளதற்கும்  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் போது, முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து பேசிய பேச்சும், தேர்தல் அறிக்கை  தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதற்காக தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டதோடு, 13.4.2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.விற்கு தங்களுடைய அமைப்பு முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்து, மேலும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் குறித்த விவரங்களையும் தெரிவித்ததோடு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர். அதற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago