முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகன்களுக்காக அரசியல் நடத்துபவர் கருணாநிதி - சேதுராமன்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.2 - மகன்கள் மற்றும் பேரன்களுக்காக அரசியல் நடத்துபவர் கருணாநிதி என்று டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார். திருச்சுழி தொகுதி அ.இ. மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளர் இசக்கிமுத்துவை ஆதரித்து திருச்சுழி ஒன்றியத்திற்குட்பட்ட மல்லம்பட்டி, குல்லம்பட்டி, கல்லூரணி உள்ளிட்ட கிராமங்களில்  கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்  பேசியதாவது, தமிழ்நாட்டில் சினிமா துறையா அதிலும் திமுகதான், ரியல்எஸ்டேட், கேபிள்டிவி, சினிமா வினியோகம், விமானசர்வீஸ் என இன்றைக்கு கருணாநிதி குடும்பம் தான் எல்லா துறைகளிலும் கொடி கட்டிப்பறக்கிறது. கிராமத்தில் இருக்கிற டீக்கடை, பெட்டிக்கடைகளை மட்டும்தான் அவர்கள் தொடவில்லை. பணம் கொழிக்கிற அனைத்து தொழில்களிலும்  தனி தர்பார் நடத்தும் கருணாநிதியை இந்த தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

    கருணாநிதி ஆட்சியில் கேபிள்டிவியை அரசே நடத்தும் என்று பேரன்களோடு சண்டை போடும்போது அறிவித்தார். ஆனால் அதே அரசு கேபிள்டிவியை மூடிவிட்டார்கள். இதை தட்டிக்கேட்ட  தலித் அதிகாரி உமாசங்கரை இவர்கள் என்ன பாடுபடுத்தினார்கள். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எங்காவது சாதிச்சண்டை நடந்ததா, ஆனால் கருணாநிதி ஆட்சியில் எத்தனை இடங்களில் சாதி சண்டை இது ஏன்? கருணாநிதியே தூண்டிவிடும் அரசியல் இது. தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டும்,, நாளைய தலைமுறைக்காக மட்டும் உழைக்கிறவர் பாடுபடுகிறவர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி தன் மகன்களுக்காகவும், தன்னுடைய பேரன்களுக்காகவும் மட்டுமே அரசியல் நடத்துபவர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார். டாக்டர் சேதுராமன் பிரச்சாரத்தில் திருச்சுழி ஒன்றிய செயலாளர் போத்திராஜ், தேமுதிக ஒன்றிய செயலாளர் கணேசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் அன்புச்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony