முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி: சர்தாரி வாழ்த்து கடிதம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத். ஜூலை. 20 - ஐநது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான்  ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி வாழ்த்து தெரிவித்து  கடிதம் அனுப்பியுள்ளார். தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டி நடத்தாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இரு நாடுகளின் நல்லெண்ண நடவடிக்கைகளின்  காரணமாக வருகிற டிசம்பர் - ஜனவரி மாதங்களில்  இரு நாடுகளின் கிரிக்கெட்  அணிகளுக்கு  இடையே 3 ஒரு நாள் போட்டிகளையும் இரண்டு  20 ஒவர்போட்டிகளையும் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து  பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு  அழைப்பு அனுப்பியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடைஏய 5 ஆண்டு  இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டியை  அறிவித்ததற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த இரு நாட்டு  கிரிக்கெட் உறவு குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு  பாகிஸ்தான் ஜனாதிபதி  ஆசிப் அலி சர்தாரி ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு  மீண்டும் கிரிக்கெட் உறவு தொடங்கியுள்ளது ஒரு நல்லெண்ண நடவடிக்கை என்றும் அதை  தான் வரவேற்பதாகவும்  அந்த கடிதத்தில் சர்தாரி கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே காணப்படும் சாதகமான சூழ்நிலைக்கு  இது மேலும் மெருகூட்டுவதாகவும் உள்ளது என்றும் சர்தாரி தனது கடிதத்தில்  கூறியுள்ளார்.

தான் சமீபத்தில் இந்தியா வந்திருந்த போது இரு நாடுகளின்  கிரிக்கெட் உறவை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக தான்  தங்களுடன் விவாதித்ததை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டுள்ளது  தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் சர்தாரி கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்படுவது தவிர்க்க முடியாத நல்லெண்ண நடவடிக்கையாக இருக்கிறது என்றும் சர்தாரி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago