முக்கிய செய்திகள்

கருணாநிதியின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவியுங்கள் தா. பாண்டியன் பேச்சு

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      இந்தியா
Pandiyan 2

கோவை, ஏப்.- 6- மிகவும் வலுவான அ.தி.மு.க கூட்டணியை பயன்படுத்தி தமிழகத்தை கருணாநிதியின் பிடியில் இருந்து மக்கள் விடுவித்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. கிருஷ்ணன் பேசினார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேலுமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வீடு திரும்புவது கேள்விக்குறியாக உள்ளது. தொலைக்காட்சி கேபிள் இணைப்பிற்கு மாதம் ரூ 200 கட்டணமாக மக்கள் செலுத்துவதன் மூலம் மாதம் ரூ 200 கோடி கருணாநிதி குடும்பத்திற்கு போகிறது. இந்த ஆட்சி மாறியதும் கேபிள் இணைப்பு அரசுடமையாக்கப்பட்டு சலுகை கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும். அ.தி.மு.க வலுவான கூட்டணியாக உள்ளது. அதை பயன்படுத்தி கருணாநிதியின் பிடியில் இருந்து தமிழகத்தை மக்கள் மீட்டு கொள்ள வேண்டும் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: