முக்கிய செய்திகள்

தி.மு.க. சார்பில் போட்டியிட 25ம் தேதி முதல் விருப்ப மனு

 

சென்னை, பிப்.21- தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில சட்டபேரவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 25.2.2011 முதல் 7.3.2011 வரை தி.மு.க. தலைமை கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன் என்று திமுக வின் பொதுச்செயலாளர் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம் விவரம் வருமாறு, பொதுத்தொகுதிக்கு ரூ.5000ம், மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.2500ம், ரூ500ஐ தலைமைக்கழகத்தில் செலுத்தி விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: