முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை டி - 20 பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, செப். - 13 - இந்திய அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 2-வது டி - 20 கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத் தில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியா சத்தில் வெற்றி பெற்று தொடரை 1- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்திற்கு எதிராக முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2- 0 என்ற கமக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான பிரண்டன் மெக்கு ல்லம் அதிரடியாக ஆடி அணிக்கு முஇன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக வில்லியம்சன், கேப்டன் டெய்லர் மற்றும் ஜேக்கப் ஓரம் ஆகியோர் ஆடினர். பிந்பு பைபெளலிங்கின் போது, மில்ஸ் மற்றும் பிராங்ளின் ஆகியோர் நன்கு பந்து வீசினர். அவர்களுக்கு ஆதரவாக வெட்டோரி மற்றும் ஓரம்ஆகி யோர்பந்து வீசினர். இந்தியா மற்ஹும் நியூசிஆலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது 20-க்கு 20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தேது. முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து யஅணி தரப்பில் குப்டில் மற்றும் நிகோல் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தது. இஹுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 127 ரன்னை எடுத்தது. டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடாத மெக்குல்லம் இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் 55 பந்தில் 91 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, வில்லியம்சன் 26 பந்தில் 27 ரன்னையும், கேப்டன் டெய்லர் 19பந்தில் 25 ரன்னையும், ஓரம் 9 பந்தில் 18 ரன்னையும் எடுத்தனர்.
ரிந்திய அணி சார்பில், இர்பான் பதான் 31 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஜாஹிர்கான் மற்றும் பாலாஜி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்திய அணி 168 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசிலாந்து அணி ரைத்தது. பின்பு களம் இறங்கிய இன்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்னை எடுத்தது. இதனால் இந்த 2-வது போட்டியில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 1- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில், விராட் கோக்லி 41 பந்தில் 70 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற்ஹும் 1 சிக்சர் அடக்கம். தவிர, யுவராஜ் சிங் 26 பந்தில் 34 ரன்னையும், ரெய்னா 22 பந்தில் 27 ரன்னையும், தோனி 23 பந்தில் 22 ரன்னையும், எடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில், மில்ஸ் 17 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். பிராங்ளின் 26 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டி மற்றும் தொடர் நாயகனாக மெக்கு ல்லம் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்