முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2013 ஜூன் முதல் மின்வெட்டே இருக்காது: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை நவ.30 - தமிழகத்தில் 2013 ஜூன் முதல்  தேவையை விட கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதால், அம்மாதம் முதல் மின்வெட்டே இருக்காது என்று மின்துறை அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

தமிழகத்தில் தற்போது  நடைமுறையில் இருந்து வரும் பல மணி நேர மின்வெட்டு வரும் டிசம்பர் மாதம் முதல் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு சார்பில் நிலைத்த நீடித்த எரிசக்தி மேலாண்மையின் புதிய யுகம் என்ற தலைப்பில்  சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி 4000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து, தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய

பங்கு குறைக்கப்பட்டிருக்கிறதே முக்கிய காரணம். இதை ஈடுகட்ட மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் வட மாநில மின் வழித்துடத்துடன் தென் மாநிலங்கள் முழுமையாக இணைக்கப்படாததால் தேவைக்கு அதிகமாக

மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களிலிருந்து,தமிழகம் கொள்முதல் செய்ய  முடியாத நிலைமையும் உள்ளது.

இப்போது வட மாநிலங்களிலிருந்து ஒரு வழித்தடம் மட்டுமே  தென் மாநிலங்களை இணைக்கிறது.இந்த ஒரு பாதை வழியாக தமிழகம், கர்நாடகம், ஆந்கிரம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களும்  மின்சாரத்தை கொண்டு வருகின்றன. தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரே புதிய வழித்தடத்தை அமைப்பதற்கு மத்திய அரசு  கடந்த வாரம் அனுமதி அளித்து திட்டம் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.இந்த பணி 2014 மார்ச் மாதத்தில்தான்  முடிக்கப்படும் என்று தெரிகிறது. அதுவரை நிலைமையை சமாளிப்பதற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களை, விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மேட்டூர், வல்லூர்,  வடசென்னை, அனல் மின் நிலைய திட்டங்களிலிருந்து வரும் ஜூன் மாதம் முதல் 1880 மெகாவாட் அளவுமின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தனியார் உற்பத்தியாளர்களும் 2013 ஜூன் மாதத்துக்குள், உற்பத்தியை தொடங்க உள்ளனர். கூடங்குளம்  அணு மின் நிலைய முதல் திட்டத்திலிருந்து, முழுமையான அளவில் 1000 மெகாவாட் கிடைக்குமானால், இப்போதுள்ள 4000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஜூன் மாதம் முதல் சீராவதோடு கூடுதலாக 500 மெகாவாட்  மின்சாரம்  கையிருப்பு இருக்கும் என்றார்  நத்தம் விசுவநாதன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்