முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சம்பவம்: மகனை தண்டியுங்கள்: சிறுவனின் தாய்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 16 - ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனான 18 வயதை அடையாத மைனரான தமது மகனைத் தண்டிக்க வேண்டும் என்று அவனது தாயார் கூறியுள்ளார். பாலியல் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 6 வது குற்றவாளி சிறுவன். 18 வயதை அடையாத அவன் தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான். சிறுவன்தான் என்பதை அவன் படித்த ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று நீதிமன்றத்தில் உறுதி செய்தார்.

இதனிடையே அவனது தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு 6 குழந்தைகள். மூத்த மகன் 11 வயதில் வேலை தேடி டெல்லிக்கு போனான். கடந்த 3 ஆண்டுகளாக அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. தற்போதுதான் திடீரென போலீசார் விசாரித்தனர். இது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதுடன் அவனது செயலால் அவமானத்தில் தலைகுனிந்து வாழ்கிறோம். அவன் செய்த தவறுக்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago