முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதில் தாக்குதல் நடத்த எல்லை தளபதிகளுக்கு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 16 - பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் வகையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை மேற்கொண்டால் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அப்பகுதி ராணுவ தளபதிகளுக்கு தலைமை தளபதி பிக்ரம்சிங் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அவர் கூறுகையில், 

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருக்கும் தளபதிகள் அனைவரும் கடுமையான ஆத்திரத்தில் இருக்கின்றனர். ஆத்திரமூட்டும் பாகிஸ்தானின் செயலுக்கு பதில் தாக்குதலே பாதுகாப்பானது எனக் கருதுகின்றனர். அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்திய வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் கொன்றது கொடூரமானது. பாகிஸ்தான் சொல்வது போல 6 ம் தேதி நாம் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே நமது இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

சரியான நேரத்தில் சரியான இடத்தில் பதிலடி கொடுக்க இந்தியாவுக்கும் உரிமை உண்டு. பாகிஸ்தானின் நடவடிக்கை மன்னிக்க முடியாது என்றும் இது போர் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்ட ஹேமராஜின் தலையை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago