முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் மோசடி: பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளருக்கு சிறை

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2013      ஊழல்
Image Unavailable

 

சென்னை, ஜன.19 - போலி ஆவணங்களின் அடிப்படையில்  கடன் கொடுத்து மோசடி செய்த வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் உட்பட 9 பேருக்கு சிறை தண்டனையும், சுமார் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அடையாறு கிளையில் மேலாளராக 1999ம் ஆண்டு பணி செய்தவர் கே.ஒய்.சுப்பிரமணியம். இவர், தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, டி.ஜே.கலைசெல்வன், என்.தேவராஜ், வி.விஜயகுமார் ஆகியோருக்கு லாரி வாங்குவதற்கு ரூ.30 லட்சம் கடன் வழங்கியுள்ளார். இதற்காக கடன் வாங்கியவர்கள் போலி ஆவணங்கள் வழங்கியுள்ளனர். இதை ஏற்றுக்கொண்டு கடன் வழங்கிய விபரம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இதைத்தொடர்ந்து, சுப்பிரமணியம் உட்பட பலர் மீது சி.பி.ஐ.யில் பஞ்சாப் நேஷனல் வங்கி உயர் அதிகாரிகள் புகார் செய்தனர். இதனடிப்படையில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் சுப்பிரமணியம், கலைசெல்வன், தேவராஜ், வி.ஜே.விஜயகுமார், எஸ்.விஜயகுமார், ஆர்.உதயகுமார், டி.செந்தில், எஸ்.ஏழுமலை, எஸ்.ரவி ஆகியோர் மீது குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை 9-வது கூடுதல் சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு null நீதிபதி சித்தார்த்தர் விசாரித்தார். அவர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பெரும் தொகை இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனவே வங்கி மேலாளர் கே.ஒய்.சுப்பிரமணியத்துக்கு 3 ஆண்டுசிறை தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும், டி.ஜே.கலைசெல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.13 லட்சம் அபராதமும், என்.தேவராஜ், வி.ஜே.விஜயகுமார் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.14 லட்சம் அபராதமும், எஸ்.விஜயகுமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும், ஆர்.உதயகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், டி.செந்திலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.30 லட்சம் அபராதமும், எஸ்.ஏழுமலைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.70 லட்சம் அபராதமும், எஸ்.ரவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.20 லட்சம் அபராதமும் விதிக்கிறேன்.

இவ்வாறு nullநீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago