முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவில் வருமானம் ரூ.4 கோடி

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, ஜன. 20  - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி மலைக் கோயிலுக்கு கிடைத்துள்ள வருவாய் மற்றும் உண்டியல் வருமானம் ரூ. 4 கோடியை தாண்டியுள்ளது. பழனி மலைக் கோயிலில் கடந்த 12,13,14,15,16 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருக்கோயிலுக்கு பல்வேறு இனங்களில் வருவாய் அதிகரித்தது. பஞ்சாமிர்தம் விற்பனை, விஞ்ச் டிக்கெட் வருவாய், தங்க ரத புறப்பாடு, சிறப்பு வழி தரிசனம், காவடி மற்றும் அர்ச்சனை டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றின் மூலமாக மேற்கண்ட 5 நாட்களில் மட்டும் ரூ. 2 கோடியை தாண்டியது. 

இந்நிலையில் திருக்கோயில் உண்டியல்கள் கடந்த வெள்ளிக் கிழமை திறக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏராளமான தங்கம், வெள்ளிப் பொருட்கள், ரொக்க பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இது சுமார் 2 கோடி ரூபாயை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனி கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago