எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருகோணமலை, பிப். 6 - இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே மிரட்டல் விடுத்துள்ளார். இலங்கையின் 65 வது சுதந்திர நாள் விழா திருகோணமலையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மகிந்த ராஜபக்சே பேசுகையில்,
இந்த திருகோணமலை துறைமுகத்தை உலக நாடுகள் கைப்பற்றத் துடிக்கின்றன. நாடு விடுதலை அடைந்த உடனேயே இங்கிலாந்து படையினர் திருகோணமலை துறைமுகத்தை விட்டு வெளியேறவில்லை. சில ஆண்டுகள் கழித்தே வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு எதிராக அடிப்படை இல்லாத தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை இறைமையுள்ள நாடு. ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்றுள்ள நாடு. இப்படி இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஐ.நா. சபை அனுமதிக்காது. இந்த நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவது ஐ.நா. விதிகளுக்கு விரோதமானது என்றார். வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர உள்ள நிலையில் ராஜபக்சே மிரட்டல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


