எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.10 - அ.தி.மு.க. இலக்கிய அணி சார்பில் குழந்தைகள் பங்கேற்ற பேச்சுபோட்டி நடைபெற்றது.முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளை யொட்டி நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள கீதாபவனில் அ.தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற பேச்சுபோட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும் அமைச்சருமான பா.வளர்மதி தலைமை தாங்கினார். விழாவில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. மாநகராட்சி, கவுன்சிலர்கள் டி.சிவராஜ், நுங்கைமாறன், கோபி, உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் சுமார் 500 பேர் கலந்து கொண்டு `அம்மா என்றால் அன்பு' அம்மா என்றால் அறிவு அம்மா என்றால் துணிவு ஆகிய தலைப்புகளில் பேசினார்கள்.
இந்த பேச்சு போட்டியின் நடுவர்களாக துரைராஜன், போளூர் கோவிந்தன், வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கபதக்கமும், இரண்டாவது பரிசு கோப்பையும், மூன்றாவது பரிசு கோப்பையும் வழங்கப்படும். பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகள் உண்டு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


