முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிடில்டனின் பிகினி படங்களை பிரசுரிக்கத் தயாராகும் 'சி'

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், பிப். 14 - கர்ப்பமாக இருக்கும் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் புத்தம் புதிய பிகினி படங்களுடன் தயாராகி வருகிறதாம் இத்தாலி நாட்டின் பத்திரிக்கையான சி. ஏற்கனவே இந்த சி, கேட்மிடில்டன் தனது கணவருடன் சுற்றுலா போயிருந்தபோது அங்கு அவர் டாப்லெஸ்ஸாக இருந்த படங்களைப் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இங்கிலாந்து ராஜகுடும்பம் சி பத்திரிக்கை மீது வழக்கும் போட்டது நினைவிருக்கலாம். 

இந்த நிலையில் தற்போது அதே பத்திரிகை, கேட் மிடில்டனின் பிகினி படங்களைப் பிரசுரிக்கத் தயாராகி வருகிறதாம். பிகினி படங்களுடன் கூடிய பத்திரிக்கை தற்போது அச்சாகி வருகிறதாம். கேட் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் அவரது பிகினி படங்கள் வெளியாவது ராஜகுடும்பத்தை பெரும் தர்மசங்கடத்திற்குள்ளாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கரீபிய தீவுகளில் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது எடுத்த படங்கள்தான் இவை என்று சி கூறியுள்ளது. இதே கரீபிய விடுமுறையின்போதுதான் டாப்லெஸ்ஸாகவும் காட்சி தந்தார் கேட் மிடில்டன் என்பது நினைவிருக்கலாம். சி பத்திரிக்கை கேட்டின் பிகினி படங்களை வெளியிடுவதற்கு ராஜ குடும்பத்தின் சார்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன. எதிர்ப்புக் குரலும் வெளியாகியுள்ளது. 

சி பத்திரிக்கையின் இந்த செயல், அரச தம்பதியின் அந்தரங்கத்தில் பகிரங்கமாக தலையிடுவது போலாகும். இது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளனர். மேலும் இந்தப் படங்கள் வெளியானால் அந்தப் பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு நிச்சயம் தொடரப்படும் என்றும் அரச குடும்பத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முஸ்டிக் தீவில் தனது கணவர் வில்லியமுடன் பிகினி உடையில் கேட் மிடில்டன் ஜாலியாக சுற்றித் திரியும் காட்சிகள் இந்தப் பிகினி படங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago