எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுமத்ரா, பிப். 17 - 2012 டி.ஏ. 14 விண்கல், எந்த வித ஆபத்தையும் விளைவிக்காமல், நள்ளிரவில் பூமிக்கு மிக அருகே கடந்து சென்றது. விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு, விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டதை விட பூமிக்கு மிக அருகில் விண்கல் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் மூலம், இதன் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மேல் பகுதியில் கடந்து சென்ற இந்த விண்கல், இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு சில நிமிடங்கள் முன்பாக, பூமியில் இருந்து 17 ஆயிரத்து 200 மைல் உயரத்தில், பூமியைக் கடந்து சென்றது தெரியவந்துள்ளது.
பூமிக்கும், செயற்கைக் கோள்களுக்கும் இடையே உள்ள பகுதியில், கடந்து சென்ற இந்த விண்கல்லில் இருந்து, சில மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் நேற்று விழுந்த எரிகல்லுக்கும், 2012 டி.ஏ.14 விண்கல்லுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


