இந்திய நிஜாமின் ரோஸ் வைரம் அமெரிக்காவில் ஏலம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

நியூயார்க், ஏப். 18 - இந்திய அரச குடும்பத்தின் ரோஸ் நிற வைரம் அமெரிக்க ஏல நிறுவனத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் பண்டைய முகாலய சாம்ராஜ்யமாக விளங்கிய ஐதராபாத் பகுதியை ஆட்சி புரிந்த நிஜாம் அரச குடும்பத்தினரின் சொத்தாக விளங்கிய அரிய வகை ரோஸ் நிற வைரம், நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில் இடம் பெற்றது. 34.65 காரட் எடை கொண்ட இந்த வைரம், இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அந்நிறுவனம் கருதுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்: