எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி, ஏப். 18 - பாபுவா நியூ கினியாவில் நேற்று காலை 8.55 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. பாபுவா நியூ கினியாவில் வடக்கு கடற்கரை பகுதியில் நேற்று காலை 8.55 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. ஐடாபே என்ற இடத்தில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் சுமார் 3 நிமிடங்கள் நீடித்ததாகவும், அப்போது அலமாரியில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்ததாகவும் ஐடாபே ரிசார்ட் ஹோட்டலில் தங்கியிருந்த மேக்ஸ் கமாவே என்பவர் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 13 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் சுனாமி வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் மேட்டுப் பகுதிகளுக்கு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆனால் இது போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தக் கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1998ம் ஆண்டில் பாபுவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரை பகுதியில் 7.0 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி பேரலைகள் எழுந்தன. இதில் ஐடாபே உள்ளிட்ட பல கிராமங்கள் பாதிக்கப்பட்டதில் 2,200 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


