எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்,ஏப்.20 - பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம் இன்னும் 2 நாட்களில் அவரை தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது பெனாசீர் பூட்டோ படுகொலை,நீதிபதிகளை கடத்தியது உள்ளிட் 3 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி துபாய் மற்றும் லண்டனில் வசித்து வந்தார். இந்தநிலையில் பாகிஸ்தானில் அடுத்தமாதம் 11-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பினார். தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தாயகம திரும்பி இருந்தார்.
இதனிடையே கடந்த 2007-ம் ஆண்டு அவர் அதிபராக இருந்தபோது 60 நீதிபதிகளை கைது செய்யப்பட்டு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு. நீதிபதிகள் கைது செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த முஷாரப் நீதிமன்றத்தில் இருந்து தன் பாதுகாவலர்கள் உதவியுடன் தப்பியோடினார். அவரை வலைவீசி தேடிவந்த போலீசார் நேற்று இஸ்லாமாபாத் அருகே அவரது பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த அவரை மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முஷாரப்பை ஆஜரப்படுத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டது. முஷாரப் கைது செய்யப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


