எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாஸ்டன், ஏப். 21 - அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு வைத்த இரு செசன்யாவைச் சேர்ந்த சகோதரர்களில் அண்ணன் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று அவரது தம்பி கைது செய்யப்பட்டார். செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்த தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19 இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள். இந்த இருவரும் தான் கடந்த திங்கள்கிழமை நடந்த மாராதான் போட்டியில் வெடிகுண்டு வைத்தவர்கள். சி.சி.டி.வி. ல் பதிவான இந்த இருவரின் படங்களையும் எப்.பி.ஐ. வெளியிட்டு இருவரையும் தேடி வந்த நிலையில், இருவரும் வாட்டர்டவுன் பகுதியில் காரில் வந்த ஒருவரை துப்பாக்கி முனையில் வழிமறித்து அவரை காருடன் கடத்தினர். பின்னர் காரில் இருந்தவரை இறக்கி விட்டுச் சென்றனர். இந்த விவரம் அறிந்த போலீசார் அந்தக் காரை விரட்டிச் சென்றபோது, இருவரும் காரில் இருந்து வெடிகுண்டுகளை வெளியே வீசினர். இதையடுத்து எப்.பி.ஐ. யும் போலீசாரும் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த தமேர்லான் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், ஷோக்கர் தப்பிவிட்டார்.
இதையடுத்து இவரைத் தேடி வாட்டர்டவுன் பகுதியில் வீடுவீடாக சோதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு வாட்டர்டவுனின் பிராங்ளின் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின் பகுதியில் ஆற்றுப் பகுதியில் ஒரு படகில் இவர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்த போது அவர் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டதில் காயமடைந்த அவர் பிடிபட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள அவரிடம் விசாரணை நடத்தினால் தான் இந்தத் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


