முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கத்தில் இருந்து 800 பேரை காப்பாற்றிய பை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப். 27 - ஒரு முதியவரின் புகையிலைப் பை சீனாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் இருந்து 800 பேரை காப்பாற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சிட்சுவான் மாகாணம் லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோவில் 7 அலகுகளாக பதிவாகி இருந்தது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அதே சமயம் சிட்சுவான் மாகாணத்தை சேர்ந்த பியூஜியாயிங் கிராமத்தை சேர்ந்த 800 பேர் முதியவர் ஒருவரின் புகையிலைப் பையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

லீ சியாங்கே என்ற அந்த 68 வயது முதியவர் புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் தன்னுடைய புகையிலை பையை எப்போதும் தன் கையில் கட்டியிருப்பது வழக்கம். சம்பவம் நிகழ்ந்த நாளில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருடைய கையில் இருந்த புகையிலை பை இயற்கைக்கு மாறாக விநோதமாக அசைந்தாடியிருக்கிறது. அந்த அசைவினால் அவர் உடனே விழித்தெழுந்தார். 

உடனே அவருக்கு 2008 ம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பம் நினைவுக்கு வந்தது. அப்போதும் அந்த புகையிலை பை இயற்கைக்கு மாறாக அசைந்தாடி இருக்கிறது. இதையடுத்து கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை நினைவு கூர்ந்த அந்த முதியவர் உடனே வீட்டை விட்டு வெளியேறி நிலநடுக்கம் ஏற்பட போகிறது. உடனே அனைவரும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் என்று கூச்சலிட்டவாறு அருகில் இருந்த வீட்டுக் கதவுகளையும் தட்டினார். வெளியே வந்த கிராமத்தினர் மற்றவர்களையும் குரல் எழுப்பி எச்சரிக்க கிராமத்தில் இருந்த 800 பேரும் வீட்டை விட்டு வெளியே சாலையில் குழுமியுள்ளனர். அடுத்த ஓரிரு நிமிடங்களில் கடும் நிலநடுக்கம் ஏற்பட அங்குள்ள வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகின. புகையிலை பை மூலம் தங்களை எச்சரித்து உயிரை காப்பாற்றிய அந்த முதியவரை கிராமத்தினர் ஆரத்தழுவி நன்றி தெரிவித்தனர். தற்போது அனைவரும் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். புகையிலை பையின் மகத்துவம் சீனாவின் இதர பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago