அகிலஇந்திய ஐஏஎஸ் தேர்வில் கேரளபெண் முதலிடம்

சனிக்கிழமை, 4 மே 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், மே. - 5 - அகில இந்திய ஐ.ஏ.எஸ். தேர்வில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹரிதா வி.குமார் முதலிடம்  பிடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய  குடிமைப் பணித் தேர்வுகளை  யூ.பி.எஸ்.சி. அமைப்பு  நடத்தியது. 2012 மே 20 ஆம் தேதி முதற்கட்டத்  தேர்வும்,  நடைபெற்றன.  இந்த ஆண்டு மார்ச்  - ஏப்ரல் மாதங்களில்   இறுதிக்கட்ட  நேர்காணல்  நடைபெற்றது.  இத்தேர்வு   முடிவுகள்  வெள்ளிக்கிழமை  அறிவிக்கப்பட்டன. இதில்,கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த   ஹரிதா வி.குமார்   முதலிடம்  பிடித்தார். இத்தேர்வில், தொடர்ந்து  மூன்றாவது  ஆண்டாக  பெண்களே  முதலிடம் பிடித்து வருவது  குறிப்பிடத்தக்கது.   இது குறித்து  ஹரிதா கூறுகையில், ாஇத்தகவல்  உண்மை என்று நான் முதலில் நம்பவே  இல்லை. என் நண்பர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்தபோது  என்னை  ஏமாற்றுவதற்காக  தமாஷ் செய்கின்றனர் என்று தான் நினைத்தேன்.  எனது வெற்றிக்காக  உதவிய  ஆசிரியர்கள், நலம்  விரும்பிகள் மற்றும்  நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.  ா 

என்றார். அவரது  பெற்றோர்  கூறுகையில்,  ாஇது ஹரிதாவின்  கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு  மற்றும் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.  கடவுளுக்கும்,   எங்கள் மகளுக்கு  உதவிய  அனைவருக்கும் நன்றி ா

என்று தெரிவித்தனர். ஹரிதா ஏற்கனவே  இந்திய வருவாய்ச் சேவை  (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரியாக ஃபரீதாபாதில்  பணிபுரிந்து  வருகிறார்.  ஏற்கனவே மூன்று முறை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய  அவர்,  இப்போது  நான்காவது  முயற்சியில்  வெற்றி பெற்றுள்ளார். 

பொறியியல் பட்டதாரியான  அவர் ஐஏஎஸ்  தேர்வில்  முக்கியப்  பாடங்களாக   பொருளியலையும் மலையாள மொழியையும் தேர்வு செய்திருந்தார்.  இதனிடையே,இத்தேர்வில்  இரண்டாம் இடத்தையும் கேரள  மாநிலத்தைச் சேர்ந்தவரே பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொச்சியைச் சேர்ந்த வி.ஸ்ரீராம் இரண்டாம்  இடத்தையும், கேரள  மாநிலம்  மூவாற்றுப்புழையைச் சேர்ந்த  ஆல்பி ஜான்  வர்கீஸ்  நான்காவது  இடத்தையும்  பிடித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: