பஞ்சாப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வென்றது

செவ்வாய்க்கிழமை, 14 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர்,மே.15 - ஐ.பி.எல். -6 போட்டியில் பெங்களூரி ல் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்தது. பஞ்சாப் அணி தரப்பில், கேப்டன் ஆட ம் கில்கிறிஸ்ட் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பா தைக்கு அழைத்துச் சென்றார். அவருக் குப் பக்கபலமாக ஆல்ரவுண்டர் அசார் மெஹ்மூத் ஆடினார். 

இந்தப் போட்டியில் பெளலிங் எடுபட வில்லை. இரு அணி பேட்ஸ்மேன்களு ம் ரன் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். 

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் அந்த ரன்னை சேஸ் செய்து வெற்றி பெற்றது. 

ஐ.பி.எல். போட்டியின் 63-வது லீக் ஆட்டம் பெங்களூரில் உள்ள சின்னசாமி அரங்கத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் பெங்களூர்  மற் றும் பஞ்சாப் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 5  விக்கெட்இழப்பிற் கு 174 ரன்னை எடுத்தது. 

பெங்களூர் அணி தரப்பில் கெய்ல் அதி கபட்சமாக 53 பந்தில் 77 ரன்னை எடுத் தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ச ர் அடக்கம். தவிர, கேப்டன் கோக்லி 43 பந்தில் 57 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, புஜாரா 19 ரன்னையும், ராகுல் 8 ரன்னையும் எடுத்தனர். 

பஞ்சாப் அணி சார்பில், அவானா 39 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடுத் தார். தவிர, ஆல்ரவுண்டர் அசார் மெ ஹ்மூத் 24 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். 

பஞ்சாப் அணி 175 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பெ ங்களூர் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்னை எடு த்தது.

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் பஞ் சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி யின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

பஞ்சாப் அணி தரப்பில் கேப்டன் ஆட ம் கில்கிறிஸ்ட் 54 பந்தில் 85 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 10 பவுண்டரி மற் றும் 3 சிக்சர் அடக்கம். அசார்மெஹ் மூத் 41 பந்தில் 61 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, ஆர். சதீஷ் 12 ரன்னை எடுத்தார். 

பெங்களூர் அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர்கான் 30 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடு த்தார். தவிர, முரளீதரன் மற்றும் உனா  ட்கட் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: