எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே. 30 - அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப்படைகள் சுட்டுக் கொல்லவில்லை என்றும், அவராக தற்கொலைப்படை பெல்ட் அணிந்து அதை வெடிக்கச் செய்து இறந்ததாகவும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நிம் அப்துல் பத்தாஹ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011 ம் ஆண்டு மே மாதம் 2 ம் தேதி அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் கடலில் வீசப்பட்டது. இந்நிலையில் ஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நிம் அப்துல் பத்தாஹ்(57) கூறுகையில்,
ஒசாமாவை அமெரிக்கப்படைகள் ஒன்றும் கொல்லவில்லை. அமெரிக்கப் படைகள் காம்பவுண்டுக்குள் புகுந்து அவரின் காவலர்கள் இருவரை சுட்டுக் கொன்றன. மேலும் ஒசாமாவின் தொடையில் சுட்டனர். உடனே ஒசாமா தன் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தார். இந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கு இல்லை. அவரின் உறவினர்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.
அமெரிக்க படைகள் அவரை அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக அவர் இறந்த பிறகு அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டது. ஒசாமா உடலை கடலில் புதைத்தாகக் கூறுவதில் உண்மையில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா பொய் சொல்லியுள்ளார். அமெரிக்கப்படைகள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ஒசாமா 10 ஆண்டுகளாக தனது இடுப்பில் வெடிகுண்டு பெல்ட்டை கட்டிக் கொண்டு திரிந்தார் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


