எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாக்தாத், ஜூன். 29 - ஈராக்கில் தேனீர் விடுதிகளில் குண்டு வெடித்ததில் 22 பேர் பலியாகினர். ஈராக்கில் கடந்த சில மாதங்களாக ஷியா மற்றும் சன்னி பிரிவினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன. மைனாரிட்டியாக இருக்கும் சன்னி பிரிவினரை ஷியா பிரிவினருடன் சேர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர். அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் பாக்தாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் தேனீர் விடுதிகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினார்கள்.
வடக்கு, தெற்கு பாக்தாத்தில் 2 தேனீர் விடுதிகளில் குண்டு வெடித்தது. அப்போது அங்கு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட கால்பந்து போட்டியை ஏராளமான இளைஞர்கள் பார்த்து கொண்டிருந்தனர். இச்சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். பாக்தாத் அருகே உள்ள பரூபா நகரில் நடந்த 2 குண்டு வெடிப்புகளில் 10 பேர் இறந்தனர். ஜெய்வா நகரில் தேநீர் விடுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேரும், இஸ்காந்திரியாவில் நடந்த கார் குண்டு தாக்குதலில் ஒருவரும் ஆக மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். தினசரி இது போன்ற அதிரடி தாக்குதல்கள் நடப்பதால் ஈராக் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


