பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்த ஆலோசனை

புதன்கிழமை, 4 மே 2011      இந்தியா
petroleum products

 

புதுடெல்லி,மே.4 - பெட்ரோலிய பொருட்களின் விலையை மேலும் உடனடியாக உயர்த்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.நாட்டில் விலைவாசி இன்னும் குறைந்த பாடில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஆயில் கம்பெனிகளுக்கும் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பெட்ரோலிய பொருட்கள் விலை கடந்த 3 ஆண்டுகளில் 9 முறை உயர்த்தியும் ஒரு நாளைக்கு ஆயில் கம்பெனிகளுக்கு தினமும் ரூ. 500 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

அதனால் பெட்ரோலிய பொருட்கள் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை கூறியுள்ளது. இல்லாவிட்டால் விலைவாசி உயர்வதோடு பொருளாதார வளர்ச்சியும் ஓரளவுதான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கடுமையாக எச்சரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருப்பதால் பெட்ரோலிய பொருட்களுக்கும் உரங்களுக்கும் கொடுக்கப்படும் மான்யம் குறைக்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் சில்லரை விலையை உயர்த்தாவிட்டால் பட்ஜெட் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: