எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.2 - மத்திய அரசு அமல்படுத்த முன்வந்துள்ள இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரையே ஆளுவதற்கு உரிமைப் பெற்றுள்ள அரசு, இதைச் செய்வதற்கு தார்மீக உரிமையும், அதிகாரமும் கிடையாது என்றும், இந்த விலை நிர்ணயத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப்பின் உருவாகும் மத்திய அரசு இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க. எடுக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் இரண்டாம் முறையாக 2009-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார மேம்பாட்டிற்கும், தொழில் உற்பத்திக்கும், விவசாய உற்பத்திக்கும் மற்றும் மக்களின் வளத்திற்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், கொள்கை முடிவுகளை எடுக்காமல் கொள்கை முடக்குவாதத்தில் இருந்து வந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எந்த வித கொள்கை முடிவுகளையும் எடுக்க திராணியற்று இருப்பதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தும், சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்திய பொருளாதார மதிப்பீட்டை குறைத்துவிடும் என்ற அச்சத்திலும் பங்கு சந்தை வீழ்ச்சியாலும், அச்சமடைந்து, அவசர கதியில் பல்வேறு புதிய கொள்கை முடிவுகளை, சீர்திருத்தங்கள் என சொல்லப்படும் பொருளாதார சீர்கேட்டுக் கொள்கைகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சமீப காலமாக எடுத்து வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்து, அடுக்கடுக்காக எடுக்கப்படும் புதிய கொள்கை முடிவுகள் அனைத்தும் சாமானிய மக்களை வஞ்சிப்பதாகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளன. கொள்கை முடக்குவாதத்திலிருந்து அளவுக்கு அதிக கொள்கை என்று சொல்லக் கூடிய வகையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு நாளும் புதுக் கொள்கைகளை அறிவித்து வருகிறது. பெட்ரோலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளுதல்; மாதாமாதம் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுதல்; டீசல் விலையுடன் ரயில்வே சரக்கு கட்டணத்தை இணைத்துக்கொள்ளுதல்; அதன் வாயிலாக ரயில் சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுத்தல்; மானிய விலையிலான வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை வருடத்திற்கு முதலில் 6 என்றும், பிறகு 9 என்றும் நிர்ணயித்தது; அந்நிய செலாவணி சந்தையில் பலரும் பங்குபெறுதலை ஊக்குவித்தல்; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல்; ஊட்டச்சத்துடன் இணைந்த உரக்கொள்கை; மானியத்திற்கு பதிலாக நேரடி பண மாற்றம்; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது போன்ற எண்ணற்ற மக்கள் விரோதக் கொள்கைகளை சமீப காலத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது. இந்த கொள்கைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மானியங்களை கட்டுப்படுத்துவதற்கும், சமூகப் பாதுகாப்புக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை குறைப்பதற்கும் தான் வழிவகுத்தன. மேலும், பெருந்தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபம் அடையவே இந்த கொள்கைகள் வழிவகை செய்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது, இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் நிர்ணயித்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜனின் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான சராசரி விலை, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களிலுள்ள வர்த்தக மையங்களில் உள்ள சராசரி விலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஒரு சிக்கலான வழிமுறையை இந்தக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிடும் பொழுது ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை தற்போதுள்ள 4.2 டாலர் என்ற அளவிலிருந்து 8.4 டாலர் என்ற அளவில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு விலையை உயர்த்துவது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இயற்கை எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நடவடிக்கை என கூறிக்கொண்டு, ஒரு பெரும் தொழில் நிறுவன குழுமத்திற்கு சலுகை அளிப்பதாகவே அமைந்துள்ளது. அந்த தொழில் நிறுவனம் தனது ஓஎ ஈ 6 படுகையில் உற்பத்தி செய்ய உத்தரவாதம் அளித்ததற்கும் மிகக் குறைந்த அளவிலேயே இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்கு தண்டனை அளிக்கப்படுவதற்கு பதிலாக, மிகப் பெரும் லாபம் அடையவே இந்த புதிய கொள்கை வழிவகுக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, கொள்கை அடிப்படையில், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதற்கு ஊக்கம் அளித்தது. அதன் அடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் யூரியா தயாரிக்கும் உர நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 81 சதவீதம் இயற்கை எரிவாயுவையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அதே போன்று பல மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் எரிபொருளாக இயற்கை எரிவாயுவையே பயன்படுத்துகின்றன. போதிய அளவு இயற்கை எரிவாயு கிடைக்காத காரணத்தினால் அகில இந்திய அளவில் 28000 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு உள்ளது. இயற்கை எரிவாயு விலை 8.4 டாலர் என்ற அளவுக்கு அதிகரிக்கும் போது இந்த மின் உற்பத்தி நிலையங்களும் யூரியா தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இல்லையெனில் யூரியா போன்ற உரம் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர வழிவகுக்கும். இந்த விலை உயர்வை சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியவர்கள் தான் தாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்படும் விலை கொள்கையே தவறு என்று நான் பல முறை சுட்டிக்காட்டி வருகிறேன். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, மற்றும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, அவற்றை சுத்திகரிக்க ஏற்படும் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று நான் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். ஆனால் மத்திய அரசு 'வர்த்தக சமநிலை விலை' என்ற ஒரு செயற்கையான விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கும் இது போன்று செயற்கையான விலை நிர்ணயம் செய்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. முழுவதும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கு உற்பத்தி செய்யப்படும் விலையை மட்டும் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டால் தான் உரம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களும், இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் மின் நிறுவனங்களும் குறைந்த விலையில் இவற்றை மக்களுக்கு வழங்க இயலும். மேலும், இயற்கை எரிவாயு விலை ரூபாய் மதிப்பில் தான் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமேயன்றி, அமெரிக்க டாலர் மதிப்பில் நிர்ணயம் செய்யப்படக் கூடாது.
இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் தனிப்பட்ட எவருடைய சொத்தும் அல்ல. இவை இந்திய மக்கள் அனைவருக்கும் உரித்தான பொதுச் சொத்து. இந்த இயற்கை வளங்களின் உண்மையான சொந்தக்காரர்கள் பொதுமக்கள் தான். இந்த இயற்கை வளங்கள் அரசு கொள்கைகளால் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே மத்திய அரசு இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 2014ம் ஆண்டு மே மாதம் வரையே மக்களால் ஆட்சிப் பொறுப்பை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த வித தார்மீக அதிகாரமும் கிடையாது. எனவே அடுத்த ஆண்டு மத்தியில் அமையப் பெறும் புதிய அரசு இதை நிர்ணயம் செய்வதே சரியானதாகும். மத்திய அரசு விடாப்பிடியாக இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை திரும்பப் பெறவில்லையெனில், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பின் உருவாகும் மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலையை அடையும். எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ