முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா: தீயை அணைக்க போராடிய 19 வீரர்கள் பலி

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

அரிசோனா,ஜூலை.2 -  அமெரிக்காவின் அரிசோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ்டுபட்ட 19 அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் அதில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது மரணத்தை வீர மரணம் என்று அதிபர் பராக் ஒபாமா வர்ணித்துள்ளார்.

வட மேற்கு பீனிக்ஸ் அருகே உள்ள யார்னெல் என்ற இடத்தில் மின்னல் காரணமாக காட்டுத் தீ பரவியது. இதில் 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்து விட்டன. இதை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் தீரத்துடன் ்டுபட்டனர். அதில்தான் 19 பேர் உயிரிழந்தனர்.

இறந்த 19 பேரும் கிரானைட் மெளன்டைன் ஹாட்ஷாட்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்த அதிரடி வீரர்கள் ஆவர். மொத்தம் 20 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சென்றனர். அதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தீயணைப்புப் படையினர் பலரும் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஒரு சம்பவத்தில் அதிக அளவிலான தீயணைப்புப் படையினர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தனை அமெரிக்கர்களின் இரங்கல்களும், வேதனையும், இந்த 19 பேரின் மரணத்திலும் அடங்கியுள்ளது. இவர்கள் அனைவரையும் அமெரிக்கர்கள் வணங்குகிறார்கள். இவர்கள் அனைவருமே சாதாரண வீரர்கள் அல்ல, ஹீரோக்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago