முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் வலுவடையும்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், ஜூலை. 13 - அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பில் நியூயார்க் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சர்மா இவ்வாறு தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது, 

இந்தியாவை சர்வதேச அளவில் உற்பத்தி மையமாக்குவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்கேற்ப உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக பல்வேறு கொள்கைகளை வகுத்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. 

விமான போக்குவரத்து, அணுசக்தி பாதுகாப்பு, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு வர்த்தக உறவு மேலும் வலுவடையும். அதே போல இரு தரப்பு பரஸ்பர முதலீடும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.92 லட்ம் கோடியையும், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் ரூ. 78 ஆயிரம் கோடியையும் முதலீடு செய்துள்ளன. அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் மற்றும் முதலீட்டுக்கான ஒற்றை சாளர ஒப்புதல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளித்து செயல்படுத்துவதற்கு வசதியாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு இந்தியாவுக்கு கடினமானதாக அமைந்தது. எனினும் இந்தியாவின் பொருள்களுக்கான தேவை, முதலீடு, சேமிப்பு ஆகியவை வலிமையாக உள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்றார். சி.ஐ.ஐ. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும், டி.சி.எம். ஸ்ரீராம் நிறுவன நிர்வாக இயக்குனருமான அஜய் ஸ்ரீராம் தலைமையில் சி.ஐ.ஐ. தலைமை இயக்குனர் சந்திரஜித் பானர்ஜி, பார்தி குழும தலைவர் சுனில் மிட்டல், மேக்ஸ் இந்தியா தலைவர் அனல்ஜித் சிங் உள்ளிட்ட தொழிலதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago