முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சிக்கு வந்தால் தனித் தெலுங்கானா: பா.ஜ.க.

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 13 - மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் முன்பு நாங்கள் அமைத்த உத்தராஞ்சல், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களை போல ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை அமைத்தே தீருவோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பிரதிநிதி சுதன்ஷூ திரிவேதி தெரிவித்தார். 

தனித் தெலுங்கானா மாநில விவகாரம் தொடர்பாக மன்மோகன்சிங் அரசு இதுவரை தெளிவான முடிவை எடுக்கவில்லை. விரைவில் காங்கிரஸ் அரசு தனது நிலையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பிரதிநிதி சுதன்ஷூ திரிவேதி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், 

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் இந்த விஷ.யத்தில் தடுமாறுகிறது. இந்த மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். 2006 ம் ஆண்டு பா.ஜ. கட்சி தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் நடந்த பேரணி ஒன்றில் பா.ஜ. கட்சி தெலுங்கானாவை ஆதரிப்பதாக குறிப்பிட்டதை திரிவேதி தனது பேட்டியில் சுட்டிக் காட்டினார்.

அதே போல 2009 பாராளுமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல்.கே. அத்வானியும் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதாகவும் திரிவேதி குறிப்பிட்டார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்றும் திரிவேதி தெரிவித்தார். 

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது முன்பு உத்தராஞ்சல், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதாவது உ.பி.யை பிரித்து உத்தராஞ்சல், பீகாரை பிரித்து ஜார்கண்ட், மத்திய பிரதேசத்தை பிரித்து சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை திரிவேதி சுட்டிக்காட்டினார். ஆனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா விஷயத்தில் எப்போதுமே ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று கிண்டலடித்தார் திரிவேதி. ஆனால் எங்கள் நிலையில் நாங்கள் எப்போதுமே தெளிவாகவே இருக்கிறோம் என்றும் திரிவேதி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago