Idhayam Matrimony

சோலார் பேனல் மோசடி: சாண்டியின் உதவியாளர் மீது புகார்

புதன்கிழமை, 24 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூலை. 25 - கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக பணம் வாங்கிக் கொண்டு மோசடி நடந்தது. இந்த மோசடி தொடர்பாக கேரள தொழிலதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், பணம் பெற்றதாகவும் கேரள டி.வி. நடிகை ஷாலு மேனனும் கைதானார். 

மேலும் இந்த மோசடி கும்பலுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் அலுவலகத்தை சேர்ந்தவர்களும், உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக உம்மன்சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் சரிதா நாயருடன் தொடர்பு வைத்திருந்ததாக சில மந்திரிகள் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனால் இதற்கு பொறுப்பு ஏற்று முதல் மந்திரி உம்மன்சாண்டி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. 

இதனால் உம்மன்சாண்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உம்மன்சாண்டியின் உதவியாளர் பி.சி. ஜார்ஜ் என்பவரும் சரிதா நாயருடன் தொடர்பு வைத்திருந்ததாக பரபரப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜார்ஜ் முதல்வரின் உதவியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் உம்மன்சாண்டிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு உதவியதாகவும், அவரிடம் இருந்து பணம் பெற்றதாகவும் கேரள மக்கள் தொடர்பு துறை முன்னாள் இயக்குனர் பெரோஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இதை தொடர்ந்து தலைமறைவான அவர் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்ததால் அவர் திருவனந்தபுரம் போலீசில் சரணடைந்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பெரோஸ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago