திருத்தணி ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி மீது மதுசூதனன் சாடல்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
raj6

 

திருத்தணி, பிப்.23 - திருத்தணி ஒன்றியம் சத்துருஞ்செயபுரம் ஊராட்சியிலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மற்றும் மேதினிபுரம் ஆகிய கிராங்களில் காலம் காலமாக வசித்து வருபவர்களின் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை மோசடியாக விற்பனை செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தியும், 5 ஆயிரம் மக்களை காலி செய்து விட்டு, அந்த நிலத்தை கோபாலபுரத்தை சேர்ந்த பெண்மணி மூலம் வெளி மாநில நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சியை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார். விரைவில் கருணாநிதியின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது என்று அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் எச்சரிக்கை செய்துள்ளார். 

இதுகுறித்த விபரம் வருமாறு:- 

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆணைக்கிணங்க திருத்தணி நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும், திருத்தணி நகரத்திற்கு உள்ளே வருவதற்கு கட்டப்படும் பாலத்தின் பணிகளை விரைந்து முடித்திடவும் வீட்டுவரி உயர்வையும், பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதையும், திருத்தணி கமலா தியேட்டர் அருகில்  நேற்று (22.2.2011) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.அரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கண்டன உரையாற்றிய மதுசூதனன் பேசியதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் ஜெயலலிதா ஆணைங்கிணங்க இங்கு மிகபெரிய பிரம்மாண்டமான அளவில் மக்கள் வெள்ளத்தில் இங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. திருத்தணி ஒன்றியத்திலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மக்களை அப்புறப்படுத்த மைனாரிட்டி தி.மு.க. அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால் ஜெயலலிதா இன்றைக்கும் மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்கள் வாழ்வதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமிய மக்களை ஏமாற்றுவதே கருணாநிதியின் வேலை. சென்னை கோபாலபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி இந்த மூன்று கிராமங்களை கையகப்படுத்த நினைக்கிறார். ரூ.1 கோடியே எழுபத்து ஆறு லட்சத்திற்கு அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார்.  இதை அடி மாட்டு விலைக்கு வாங்கி வெளிமாநில  நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நினைக்கிறார். காவல் துறைக்கு நான் சொல்லிக்கொள்வது ஏழை வயிற்றில் அடிக்காதீர்கள் .விரைவில் கோபாலபுரத்துக்காரரின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது. பொதுமக்களின் கண்ணீர் கருணாநிதி தண்ணீராக நினைக்கிறார். தர்மத்திற்கும், நீதிக்கும் வழி பிறக்கும் 1200 குடும்பம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகிற இடத்தை அபகரிக்க பார்க்கிறார். இது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதியது கிடையாது. என்.கே.கே.பி.ராஜா, வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் பல தி.மு.கவினர் கிராமங்களை காலி     செய்து நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். நமிதா, நக்மா, குஷ்பு ராஜியத்தை பார்க்க கருணாநிதி நினைக்கிறார். இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கருணாநிதி நாடகம் நடத்துக்கிறார். அதில் ஒன்று கனிமொழி கைது. மீனவர்ளுக்கு பாடுபடும் ஒரே தலைவி ஜெயலலிதா இந்த 3 கிராமங்களை பற்றி கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் அ.தி.மு.க. சார்பில் பேச ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இதை பேச அனுமதி மறுக்கப்பட்டது.  இன்னும் 3 மாதத்தில் மின்சார பற்றாக்குறை இருக்காது. விரைவில் ஜெயலலிதா முதல்வராக வரபோகிறார். இனி மக்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு மதுசூதனன் பேசினார்.

இதில் அரசு முன்னாள் கொறடா நரசிம்மன், திருத்தணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் டி.பார்த்தீபன், தொகுதி செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் லதா நீலகண்டன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் வேலஞ்சேரி எஸ்.பழனி நாகபூடி கோ.குமார், சேர்மேன் பி.ஜோதி, துணைத்தலைவர் எஸ்.நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் டி.எம்.சீனிவாசன், பொருளாளர் பத்மாபுரம் சுரேஷ், மணபாக்கம் மு.காமராஜ், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.பி.தாயுமாணவன், நகர இளைஞர் அணி செயலாளர் கேபிள் எம்.சுரேஷ், மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் என்.ஏ.குப்பன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜி.பெருமாள், உத்திரமேரூர் தங்கபஞ்சாட்சரம், கே.பரத் கிருஷ்ணா, நகர பாசறை செயலாளர் சி.ஜி.நந்தா, பள்ளிப்பட்டு ஒன்றியம் ஏ.ஆர்.கந்தப்பன், ஏ.ஜி.கருணாகரன், ஆர்.தேவன், டி.ஏ.சுரேஷ், ஓ.கோபி, எ.அமாவாசை, தட்சணாமூர்த்தி மற்றும் ஏ.எஸ்.பாலஜி, தெக்களூர் என்.சேட்டு, சம்பத் நாடார், கவுன்சிலர்கள் சி.முனுசாமி நிர்மல்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் டி.செளந்தர்ராஜன் நன்றி கூறினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: