முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்க் ஒப்பந்தம்: 9 ஆயுள் கைதிகளை ஒப்படைத்தது இலங்கை

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

கொழும்பு, ஆக. 17 - சார்க் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைச் சிறையில் வாடிய 9 இந்திய ஆயுள் தண்டனைக் கைதிகளை இந்தியா வசம் ஒப்படைத்துள்ளது இலங்கை. போதைப்பொருள் வழக்கில் இலங்கை நாட்டின் நீதித்துறையால் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட 9 இந்தியக் கைதிகளை விடுவித்துள்ளது இலங்கை அரசு. சார்க் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. முதல்கட்டமாக ஒரு பெண் உள்பட 4 கைதிகளை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர் இலங்கை அதிகாரிகள்.
அடுத்தபடியாக சுதந்திர தினமான நேற்று முன்தினம், 5 கைதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியா வந்துள்ள இவர்கள், தங்களது மீதி தண்டனை காலத்தை இந்திய சிறையில் கழிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார் இலங்கை சிறைத்துறை அதிகாரி குலதுங்கா. ஏற்கனவே, இதே போன்று 20 கைதிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் இலங்கையால் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago