முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைது செய்யப்பட்டுள்ள சத்தார் சிறுவனா? போலீசார் மறுப்பு

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஆக.25 - மும்பையில் பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தார் சிறுவன் என்று போலீசாரிடம் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சத்தார் சிறுவன் அல்ல என்று போலீசார் அடியோடு மறுத்து உள்ளனர். 

மும்பையின் மத்திய பகுதியில் கடந்த வியாழன் அன்று ஒரு பாழடைந்த டெக்ஸ்டைல் மில்லில் ஆங்கில பத்திரிகையின் பெண் புகைப்படக்காரர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சந்த் பாபு சத்தார் ஷேக் என்று முகமத் அப்துல் மற்றும் விஜய் ஜாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 30-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையில் சத்தாருக்கு வயது 16 தான் ஆகிறது என்று அவனுடைய பாட்டி சர்ணாபாய், போலீசில் ஒரு சான்றிதழை கொடுத்துள்ளார். அந்த சான்றிதழிலில் சத்தாரின் பிறந்த தேதி 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி என்று (26-2-1997) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் இதை அடியோடு மறுத்து உள்ளனர். சத்தாருக்கு வயது 19 இருக்கும். கடுமையான தண்டனையில் இருந்து சத்தாரை தப்பிக்க வைக்கவே அவனுடைய குடும்பத்தினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சத்தாரின் பாட்டி கொடுத்துள்ள சான்றிதழ் உண்மையாக இருந்தால் சத்தாருக்கு கடும் தண்டனை கிடைக்காது. அதிகப்பட்சம் 3 ஆண்டுகள்தான் தண்டனை கிடைக்கும். அதுவும் சிறார் சீர்திருத்த சிறையில்தான் சத்தார் அடைக்கப்படுவான். பாலியல் தடுப்பு சட்டத்தில் இருந்து தப்பிக்கவே சான்றிதழ் திருத்தி கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளார். சித்தாருக்கு 19 வயதாகி அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு கடும் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். 

ஆனால் சித்தார் மிகவும் நல்ல பயன் என்று அவனுடைய பாட்டி பிறப்பு சான்றிதழை போலீசிடம் ஒப்படைத்துவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த மாதிரியான மோசமாக பாலியல் பலாத்கார செயலில் அவன் ஈடுபடமாட்டான். அவனுக்கு 16 வயதுதான் ஆகிறது. இதை நிரூபிக்க என்னிடம் போதுமான ஆதாரம் இருக்கிறது. அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன் என்று சர்னாபாய் மேலும் கூறினார். இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த நாளன்று பிற்பகல் 5.30 மணிக்கு வீட்டை விட்டு சத்தார் சென்றான். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பிவிட்டான். அப்போது அவனுக்கு காய்ச்சல் அடித்ததால் நடுங்கிக்கொண்டே இருந்தான் என்றும் பாட்டி கூறினார். ஆனால் பக்கத்தில் குடியிருப்பவர்கள் கூறுகையில் சத்தார் திருடு தொழிலில் ஈடுபடுவான் என்றும் போதை மருந்து அருந்துவதோடு மதுவும் குடிப்பான் என்றும் கூறினர். மேலும் பல கிரிமினல் வழக்குகளில் சத்தார் சம்பந்தப்பட்டுள்ளான் என்றும் அதனால் சட்ட நுணுக்கம் அவனுக்கு தெரியும் என்றும் போலீசார் தெரிவித்தனர். கடும் தண்டனையில் இருந்து தப்பிக்கவே பிறப்பு சான்றிதழை சத்தார் திருத்தியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சத்தார் ஒரு அப்பாவி என்று அவனுடைய பாட்டி கூறியிருப்பது குறித்து போலீசாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த போலீசார், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டேன் என்று சத்தார் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளான் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago