முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இப்ராகிம் ராணுவ பாதுகாப்புடன் இருக்கிறார்

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      உலகம்
Image Unavailable

புது டெல்லி, மே.13 - தாவூத் இப்ராகிம் ராணுவ பாதுகாப்புடன் கராச்சி நகரில் இருக்கிறார் என்று பக்கத்து வீட்டில் வசித்தவர் பேட்டியளித்துள்ளார். இந்த அதிர்ச் சிகரத் தகவல் பற்றிய விபரம் வருமாறு - 

மும்பையில் நிழல் உலக தாதா என்று கருதப்படும் தாவூத் இப்ராகிம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம், போதை மருந்து கடத்தல், ஹவாலா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் தாவூத் இப்ராகிம் மீது சுமத்தப்பட்டு ள்ளன. 

தாவூத் இப்ராகிமை இந்திய போலீசாரால் கைது செய்ய முடியவில் லை. இதற்கு முக்கிய காரணம் தாவூத் இப்ராகிம் அடிக்கடி தனது இரு ப்பிடத்தை மாற்றிக் கொள்வது தான்.    

தாவூத் இப்ராகிம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் வசிப்ப தாக இந்திய உளவுத் துறை (ஐ.பி.) அறிவித்தது. ஆனால் தாவூத் இப் ராகிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

உஸ்மான் பாய் என்பவர் நாக்படா என்ற இடத்தைச் சேர்ந்தவர். கரா ச்சியில் தாவூத் இப்ராகிம் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரி யும் என்று உஸ்மான் பாய் கூறியுள்ளார். இவர் தாவூத் இப்ராகிமின் பக்கத்து வீட்டுக் காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தன் பெயரை வெளியிட விரும்பாத ஓட்டல் அதிபர் ஒருவர், தாவூத் இப்ராகிம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராகிம் கராச்சி யில் இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அவரை யாரும் நெரு ங்க முடியாது. 

ஏனெனில் தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தானின் ராணுவ பாதுகாப்பு உள்ளது என்று ஓட்டல் அதிபர் கூறியுள்ளார். தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளான சாஜித் உஸ்மான், பட்லிவாலாமற்றும் கரிமுல்லா கான் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு ள் ஊடுருவி உள்ளனர். 

எனவே 2009 -ம் ஆண்டிலும், 2010 -ம் ஆண்டிலும், மும்பை குற்றப்பிரி வு போலீசாரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். கரிமுல்லா கான் தாவூத் இப்ராகிமிடம் டிரைவராக இருந்தவர். 

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதை கரிமுல்லா கான் உறுதி செய்துள்ளார். இதனை பயங்கரவாத தடுப்பு பிரிவு தலை வர் ராகேஷ் மரியா கூறினார். தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இரு க்கிறார் என்று சாஜித் உஸ்மான் பட்லிவாலாவும் போலீசாரிடம் கூறி யுள்ளார். 

தாவூத் இப்ராகிம் வெள்ளிக் கிழமைகளில் தொழுகைக்கும், மற்றும் விசேஷ நாட்களுக்கு மட்டுமே வெளியில் வருவார் என்று பட்லிவா லா கூறியுள்ளார். 

தாவூத் இப்ராகிம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகை யில், தாவூத் இப் ராகிம் வெளியில் வரும் போது, சுமார் 20 , 25 வாகனங்களில் பாது காவலர்கள் உடன் செல்வர். இவர்களில் முன்னாள் ராணுவ அதிகாரி களும் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!