முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அட்மிட்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புனே, அக். 16 - காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அன்னா ஹசாரே விந்துபை வீக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கும். சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று நோய் ஏற்படும். இதற்கு தீர்வு காண அறுவை சிகிச்சை வாயிலாக விந்து பையை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். உயர் ரத்த கொதிப்பு கட்டுக்குள் வந்தவுடன் ஆபரேசன் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அன்னா ஹசாரேவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக புனேயில் உள்ள ஜோஷி மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரத்த பரிசோதனை மற்றும் இதர பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் இந்த வார இறுதியில் அவருக்கு விந்து பை அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis