எல்லையில் பாக். படைகள் ஒரே நாளில் 8 முறை தாக்குதல்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், அக்.22 - இந்தியாவுடனான போர் ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் இந்திய நிலைகள் மீது ஒரே நாளில் 8 முறை தாக்குதல் நடத்தின.

இந்தியாவுக்கும், பாகிஸ்தா னுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்அமலில் உள்ளது.  இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி மீறி வருகிறது. இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏ

கடந்த இரு மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் 150 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 40_க்கும் மேற்பட்ட தீவிரவாத பயிற்சி முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தானிலிருந்து 700 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழையத் தயாராக உள்ளனர். 

நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர்காலம் தொடங்கி விட்டால் இந்தியாவுக்குள் நுழைவதற்கான பாதையை பனி மூடிவிடும். அதற்குள் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்திய ராணுவத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக ராணுவ உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

துவக்கத்தில் துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்த பாகிஸ்தான் தற்போது ராக்கெட், வெடிகுண்டு லாஞ்சர்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையோர மக்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு  வெளியேறி வருகிறார்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: