எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மே. - 16 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் மும் பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது.
இந்தப் போட்டியில், டெக்கான் அணி தரப்பில், எஸ். தவான், கேப்ட ன் சங்கக்கரா, ஏ. மிஸ்ரா மற்றும் சோகல் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினர். பின்பு பெளலிங்கின் போது, ஆனந்த் ராஜன், இஷாந்த் சர்மா ஆகி யோர் அபாரமாக பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி னர். டுமினி மற்றும் ஏ. மிஸ்ரா ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியின் 59 - வது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் ஐத ராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியு ம் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில், லம்ப் மற்றும் சோகல் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெக்கான் அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்னை எடு த்தது. அந்த அணி சார்பில், 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
டெக்கான் அணியின் பின் வரிசை வீரரான எஸ். தவான் 18 பந்தில் 27 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில், 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.
கேப்டன் சங்கக்கரா 28 பந்தில் 27 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்ட ரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். துவக்க வீரர் சோகல் 22 பந்தில் 20 ரன் னை எடுத்தார். தவிர, ஏ. மிஸ்ரா 6 பந்தில் 18 ரன்னையும், கிறிஸ்டிய ன் 23 பந்தில் 18 ரன்னையும், சிப்ளி 11 பந்தில் 10 ரன்னையும் எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், டி.எஸ்.குல்கர்னி நன்கு பந்து வீசி 26 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா, ஹர்பஜன் சிங் மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி 136 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை டெக்கான் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்னை எடு த்தது.
இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி மும்பையில் நடந்த இந்த பரபரப் பான லீக் ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த் தியது. இதன் மூலம் அந்த ணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
மும்பை அணி சார்பில், துவக்க வீரராக இறங்கிய கேப்டன் டெண்டுல் கர் அதிகபட்சமாக, 42 பந்தில் 37 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்ட ரி அடக்கம். இறுதியில் அவர் ஆனந்த் ராஜன் வீசிய பந்தில் கிளீன் போல்டானார்.
அடுத்தபடியாக பொல்லார்டு 13 பந்தில் 24 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, ஹர்பஜன் சிங் 12 பந்தில் 17 ரன்னையும், டி.எல். சுமன் 13 பந்தில் 14 ரன்னையும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் டெக்கான் அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக இருந்தது. மும்பை அணி தரப்பில், 4 வீரர்கள் மட்டுமே இர ட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். மற்ற வீரர்கள் ஓரிலக்க எண் ணிலேயே ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது.
டெக்கான் அணி சார்பில், ஆனந்த் ராஜன் 27 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா 30 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். தவிர, டுமினி மற்றும் ஏ. மிஸ்ரா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஏ. மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026


