அமெரிக்க கப்பலில் வந்தவர்கள் ஜாமீன் விசாரணை தள்ளிவைப்பு

Image Unavailable

 

மதுரை, டிச.4 - அமெரிக்க கப்பலில் ஆயுதங்களுசன் வந்து கைதான 35 பேர் ஜாமீன் மனு விசாரணையை 9_ம்தேதிக்கு தள்ளி வைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

அமெரிக்க தனியார் பாதுகாப்பு கப்பல் தூத்துக்குடி பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கியூ பிரிவு போலீஸாரால் சிறை பிடிக்கப்பட்டது. அந்த கப்பலில் 35 நழீன ரக துப்பாக்கிகள் 5 ஆயிரம் குண்டுகள் போன்றவை இருந்தன. இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந் ததாகவும், கப்பலில் இருந்த இங்கிலாந்து. உக்ரைன் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 35 வீரர்களும் கைது செய்யப்பட்டனர். 

தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சத்தியநாராயணா முன்னி+லையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை 9_ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

                        

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ